திருத்தணியில் இருந்து அரசு விரைவு பேருந்து கோவை நோக்கி வந்து கொண்டிருந்தது இந்நிலையில் பேருந்து ஓட்டுனர் பயணிகளை இறக்கிவிட்டு மேட்டுப்பாளையம் சாலையில் இருக்கும் பணிமனைக்கு சென்று கொண்டிருந்தார். இதனையடுத்து காந்திபுரம் டவுன் பேருந்து நிலையம் அருகே சிக்னலில் திரும்பிய போது அந்த வழியாக வந்த ஆம்னி பேருந்து அரசு பேருந்து பின்புறம் பலமாக மோதியது.

இதனால் கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து சாலையோரம் இருந்த கடை மீது மோதி நின்றதால் பேருந்துகளின் கண்ணாடிகள் உடைந்து நாசமானது. அந்த நேரம் கடை அருகே யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றன.