ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்த மேக்கப் ஆர்டிஸ்ட் மகிமா பஜாஜ், வீதியில் காரின் கண்ணாடிகளைச் சுத்தம் செய்து பிழைப்பு நடத்தி வந்த ரூபா என்ற சிறுமியைக் கண்டுள்ளார். அந்தச் சிறுமியின் கடின உழைப்பையும் எளிமையையும் பார்த்த மகிமா, அவருக்கு ஒரு அசத்தலான ‘மேக்ஓவர்’ (Makeover) செய்து அழகுபடுத்த முடிவு செய்தார்.
எந்தவித விலையுயர்ந்த வெளிநாட்டு அழகு சாதனப் பொருட்களையும் பயன்படுத்தாமல், நமது பாரம்பரிய 400 ஆண்டுகள் பழமையான இயற்கை உப்தன் (Ubtan) முறையை மகிமா கையாண்டுள்ளார்.
View this post on Instagram
முல்தானி மெட்டி, ரோஸ் வாட்டர், ஆரஞ்சு தோல் பொடி மற்றும் ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றைக் கொண்டு அந்தச் சிறுமியின் சருமத்தைப் பொலிவாக்கினார். அதேபோல், ஆப்பிள் சைடர் வினிகர் மற்றும் கிரீன் டீ கலவையால் சிறுமியின் தலைமுடியைச் சீரமைத்தார்.
மேக்கப் மற்றும் அழகான உடைகளுக்குப் பிறகு, அந்தச் சிறுமி அப்படியே பாலிவுட் நடிகை ஆலியா பட் போலவே காட்சியளித்தார். அழுக்கு உடையில் இருந்த சிறுமி, இப்போது ஒரு புரொபஷனல் மாடல் போல கேமராவிற்கு போஸ் கொடுப்பதைப் பார்த்த நெட்டிசன்கள், “இது மேக்கப் இல்லை.. ஒரு பெண்ணின் தன்னம்பிக்கையை மீட்டெடுத்த கலை” என மகிமாவைப் பாராட்டி வருகின்றனர்.
