தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருப்பவர் ஏ.ஆர் முருகதாஸ். இவர் நடிகர் சூர்யாவை வைத்து கஜினி என்ற திரைப்படத்தை இயக்கினார். இந்த படத்தில் நடிகைகள் அசின் மற்றும் நயன்தாரா ஆகியோர் ஹீரோயின்களாக நடித்தனர். இந்த படம் கடந்த 2005-ம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது. இதனால் கஜினி படத்தை ஏ.ஆர் முருகதாஸ் ஹிந்தியில் ரீமேக் செய்தார். இந்த படத்தில் ஹீரோவாக அமீர்கான் நடித்திருந்தார்.

நடிகர் அமீர்கான் சமீப காலமாக நடித்த படங்கள் எதுவும் வெற்றி பெறாததால் சிறிது காலம் சினிமாவில் இருந்து விலகி இருப்பதாக அறிவித்தார். இந்நிலையில் நடிகர் அமீர்கான் பல இயக்குனர்களிடம் தற்போது கதை கேட்டு வருவதாகவும் கஜினி இரண்டாம் பாகத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தெலுங்கு இயக்குனர் அல்லு அரவிந்துடன் கஜினி இரண்டாம் பாகத்தை எடுப்பது குறித்து நடிகர் அமீர்கான் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.