விருத்தாசலத்தில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் கலந்துகொண்டுத் திரும்பிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் காரை, ஒரு திமுக பிரமுகர் வழிமறித்தார். அப்போது, அந்தப் பிரமுகர் சீமானைப் பார்த்து “ஒழிக” என்று கூச்சலிட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால், ஆத்திரமடைந்த சீமான் காரில் இருந்து இறங்கி, அந்தப் பிரமுகரைத் தாக்கத் தொடங்கியதால் அங்குப் பெரும் பரபரப்பு நிலவியது.
விருத்தாசலத்தில் மாநாடு ஒன்றில் கலந்துகொண்டு திரும்பிய சீமானின் காரை வழிமறித்து ”ஒழிக” என கூச்சலிட்ட நபர். காரிலிருந்து இறங்கிய சீமான் அவரை தாக்கத் தொடங்கியதால் பரபரப்பு. கூச்சலிட்டவர் திமுக பிரமுகர் என சொல்லப்படும் நிலையில், அவரை கைது செய்ய வலியுறுத்தி நாதகவினர் சாலை மறியலில்… pic.twitter.com/R6IKvPHynF
— News Tamil 24×7 (@NewsTamilTV24x7) December 14, 2025
பின்னர், கூச்சலிட்ட அந்தப் பிரமுகரைக் கைது செய்யக் கோரி, நாம் தமிழர் கட்சியினர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இந்தச் சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
