திருவண்ணாமலையை அடுத்த மலப்பாம்பாடியில் உள்ள கலைஞர் திடலில், திமுக இளைஞரணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி பிரம்மாண்டமாகத் தொடங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சிக்குக் கட்சியின் இளைஞரணிச் செயலாளரும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்குகிறார்.
திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு எழுச்சியுரையாற்ற உள்ளார். அவரது வருகையையொட்டி, திருவண்ணாமலை முழுவதுமே விழாக் கோலம் பூண்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு மற்றும் பல்வேறு மூத்த அமைச்சர்கள், எம்.பி.க்கள் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் முன்னிலை வகிக்கின்றனர்.
