தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, சமீபத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நடிகர் விஜய் வேலூர் மாநாட்டில் கண்கலங்கியதற்கான உருக்கமான பின்னணியை வெளிப்படுத்தியுள்ளார்.
கரூர் மாவட்டத்தில் கட்சி நிர்வாகிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தால் விஜய் மிகுந்த மனவேதனையில் இருந்ததாகவும், அந்த வலியே அவரை வாட்டியதாகவும் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார். மேலும், சென்னையில் இருந்து வேலூர் வரை சுமார் 2 லட்சம் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் தன்னைக்காணத் திரண்டிருந்தும், பாதுகாப்பு மற்றும் கால நேரம் காரணமாக அனைவரையும் நேரில் சந்தித்துப் பேச முடியவில்லையே என்ற ஆதங்கம் விஜய்யை வாட்டியுள்ளது.
“என்னைப்பார்க்க இவ்வளவு பேர் வந்திருக்கிறார்கள், ஆனால் என்னால் அவர்களைப் பார்க்க முடியவில்லையே” என்ற அந்தத் தவிப்புதான் அவரது கண்களில் கண்ணீராக வெளிப்பட்டது என்று ஆதவ் அர்ஜுனா விளக்கம் அளித்தது தற்போது சமூக வலைதளங்களில் தவெக தொண்டர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
