
இஸ்ரேலுக்கும் – ஹமாஸ்க் குழுவினருக்கும் இடையே நடந்து வரும் போர் தீவிரமடைந்து இருக்கிறது. இந்நிலையில் காசா மீது தாக்குதல் தீவிரமடைந்திருக்கிறது. போர் காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டிருப்பதால் காசா நகரமே இருளில் மூழ்கி இருக்கிறது. மின்சாரம் இல்லாததால் மருத்துவமனையில் சிகிச்சை பெறக்கூடிய நோயாளிகள் அவதி அடைந்திருக்கிறார்கள்.
51 கிலோ மீட்டர் நீளமும், 21 கிலோமீட்டர் அகலமும் கொண்ட ஒரு செவ்வக நிலப்பரப்பு தான் காசா பகுதி. இஸ்ரேல் உடைய கிழக்கு கடற்கரை ஓரத்தில் மத்திய தரைக்கடலை ஒட்டியுள்ள இந்த பகுதியில் உணவு, குடிநீர், மின்சாரம் ஆகிய மூன்றையும் இஸ்ரேல் அரசுதான் இவ்வளவு நாட்கள் செய்து வந்தார்கள். குறிப்பாக இஸ்ரேலில் உள்ள ராமெட்டிரியலை கொண்டு தான் உணவு, குடிநீர், மின்சார தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டது.
மின் உற்பத்தி இல்லாமல் காசா நகரத்தில் இருக்கும் 18 லட்சம் மக்கள் பரிதவித்து வருவதாக குறிப்பிடப்படுகிறது. உணவு, குடிநீர், மின்சாரம் இல்லாமல் இருப்பதன் காரணமாக, மருத்துவமனைகளில் சிகிச்சைகள் பெற முடியாமல் நோயாளிகள் பரிதவித்து வருவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக தற்போது நிலைமை மிகவும் மோசமாகியுள்ளதாக கூறப்படுகிறது. இஸ்ரேல் – காசா தொடர்பான வீடியோ ட்விட்டரில் வைரலாகி அனைவரின் நெஞ்சையும் உருக வைத்துள்ளது.
The Israeli occupation was unable to confront the Palestinian resistance men directly, so it began bombing children and women in Gaza with warplanes 💔#Gaza_under_attack #PalestineUnderAttack #IsraelPalestineWar #IsraelPalestineConflict #غزة_الآن #طوفان_الاقصى_ #طوفان_القدس pic.twitter.com/cEc92fWqM3
— BILAL ANAYAT (@BILALANAYAT012) October 11, 2023
Petrified Palestinian children are crying after being injured in an Israeli airstrike on #Gaza. 💔🇵🇸 pic.twitter.com/tVlHexUeSj
— Quds News Network (@QudsNen) October 11, 2023