
திருநெல்வேலி மாவட்டம் துறையூர் பகுதியில் விஜயகுமார் (37)-பிரியா (32) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவருக்கும் குடும்பப் பிரச்சினை தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் பிரியா தனது கணவரை பிரிந்து தனியாக வசித்து வருகிறார்.
இவர் மேல தாழையூத்து ஸ்ரீநகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தனது குழந்தைகளுடன் வசித்து வரும் நிலையில் கடந்த புதன்கிழமை விஜயகுமார் பிரியா வீட்டிற்கு வந்தார். அங்கு வீட்டின் முன்பாக நின்று பிரியாவிடம், விஜயகுமார் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் பின்னர் தான் கொண்டு வந்த அரிவாளால் பிரியாவை வெட்ட முயன்றார்.
பின்னர் “கொன்று விடுவேன்” என்று மிரட்டி விட்டு அங்கிருந்து சென்று விட்டார். இது பற்றி பிரியா காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் அவர்கள் வழக்கு பதிவு செய்து விஜயகுமாரை கைது செய்தனர். மேலும் இது தொடர்பாக விஜயகுமாரிடம் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.