பிரான்ஸ் நாட்டின் வெளியுறவு துறை அமைச்சகமானது, ரஷ்யாவிற்கு எதிராக நாங்கள் உக்ரைனுக்கு ஆயுதம் வழங்கப்போவதில்லை என்று அறிவித்திருக்கிறது.

உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்யப்போர் 11 மாதங்களாக நீடித்துக் கொண்டிருக்கிறது. உக்ரைன் நாட்டிற்கு அமெரிக்கா உட்பட பல நாடுகள் ராணுவ மற்றும் பொருளாதார அடிப்படையில் பல உதவிகளை செய்து கொண்டிருக்கின்றன. அதன் மூலம் ரஷ்யாவின் தாக்குதலை உக்ரைன் எதிர்கொண்டு வருகிறது.

இந்த போரில், இரண்டு தரப்பிலும் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. இந்நிலையில் பிரான்ஸும் அதன் நட்பு நாடுகளும் ரஷ்ய நாட்டை எதிர்த்து போரில் கலந்து கொள்ளாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்களுக்கு எதிராக உக்ரைன் நாட்டிற்கு பீரங்கிகளை அளிக்கும் நாடுகள் நேரடியாக தங்களை எதிர்ப்பதாக கணக்கில் கொள்ளப்படும் என்று ரஷ்யா கூறியிருந்தது.

ரஷ்யாவின் போரை முறியடிப்பதற்காக, உக்ரைன் நாட்டிற்கு மேற்கத்திய நாடுகள் கனரக பீரங்கிகளை கொடுக்க தீர்மானிக்கிறது. இதனையடுத்து, பிரான்ஸ் நாட்டின் வெளியுறவு துறை அமைச்சகத்தினுடைய செய்தி தொடர்பாளராக இருக்கும் ஆன்-கிளேர் லெஜென்ட்ரே, உக்ரைன்  நாட்டிற்கு பீரங்கிகளை வழங்கி ரஷ்யாவிற்கு எதிரான போரில் நாங்கள் கலந்து கொள்ள மாட்டோம் என்று கூறியிருக்கிறார்.