சீன நாட்டின் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியானது, கடந்த வருடத்தில் மூன்று சதவீதம் சரிவடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீன நாட்டின் பொருளாதார நிலை மந்தமடைந்தது, உலக நாடுகளில் சிற்றலையை ஏற்படுத்தலாம் என்று ஆய்வறிக்கைகள் கூறுகிறது. அந்நாட்டின் கடந்த வருட மொத்த உள்நாட்டு உற்பத்தியானது, மூன்று சதவீதம் சரிந்திருக்கிறது. 5.5% இலக்கை காட்டிலும் குறைவாக பதிவாகி இருந்தது.

இந்த நிலை உலக நாடுகளில் விளைவுகளை உண்டாக்கும் என கூறப்பட்டது. கடந்த ஐந்து வருடங்களில் சீனா அனைத்து வகையிலும் எதிர்பாராத நிகழ்வுகளை எதிர்கொண்டு வந்திருப்பதாக அந்நாட்டின் துணை பிரதமர் வருத்தம் தெரிவித்திருக்கிறார்.

கொரோனா தொற்றால் கடும் பாதிப்புகள் ஏற்பட்ட நிலையில், கடந்த வருடம் அக்டோபர் மாதத்தில் பன்னாட்டு நிதியம் வெளியிட்டிருந்த கணிப்புகளை காட்டிலும் சீன நாட்டின் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியானது, சிறிது குறைவாக இருக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.