திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சிறுகுடியில் முன்னாள் ராணுவ வீரரான திரவியம் என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று மாலை திரவியம் கொட்டாம்பட்டி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது சென்னையைச் சேர்ந்த ரேவதி, வினோதினி ஆகியோர் வாடகை காரில் தென்காசியில் நடக்கும் தோழியின் திருமணத்திற்கு சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் வலைச்சேரிபட்டி 4 வழிச்சாலையில் சென்றபோது கார் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த திரவியம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று திரவியத்தின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் கார் டிரைவரான மனோஜ் குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.