ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள செக்டார் 56-இன் ஹுடா மார்க்கெட்டில், ஒரு இளைஞர் பசுவுக்கு சிக்கன் மோமோஸ் ஊட்டி, அதைக் காணொளியாகவும் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டிசம்பர் 2 அன்று நடந்த இந்தச் சம்பவத்தில், நியூ காலனியைச் சேர்ந்த 28 வயதான ரித்திக் என்ற இளைஞர், சாலையோரக் கடையில் மோமோஸ் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, அருகில் நின்றிருந்த பசுவுக்கு சிக்கன் மோமோஸை ஊட்டியுள்ளார்.
*गाय को खिलाया चिकन मोमोज*
गुरुग्राम में गाय को चिकन मोमोज खिलाने का वीडियो वायरल हो रहा है।
वीडियो वायरल होते ही हिंदू संगठन के कार्यकर्ताओं ने आरोपी ऋतिक को पकड़कर उसकी पिटाई कर दी।
कार्यकर्ताओं ने पुलिस में आरोपी के खिलाफ शिकायत भी दर्ज कराई है। धार्मिक भावनाएं आहत करने… pic.twitter.com/UwgNaeKmIk
— Amarjeet Kumar (@Amarjeet0096) December 10, 2025
இந்தக் காணொளி சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து, குறிப்பாக இந்து அமைப்புகளிடையே கடுமையான கோபத்தை ஏற்படுத்தியது. அவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, அந்த இளைஞனைக் கண்டுபிடித்து, காவல்துறையிடம் ஒப்படைத்தனர். காவல்துறையினர் அந்த இளைஞரிடம் விசாரணை நடத்திய பிறகு, அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
சமூக ஊடகங்களில் வெளியான காணொளி ஒன்றில், அவர் பொது மன்னிப்பு கேட்டதோடு, ஆன்லைனில் இருந்த சிலரால் தான் மூளைச் சலவை செய்யப்பட்டதாகவும், அதன் வேகத்தில் இந்தச் செயலைச் செய்ததாகவும் கூறியுள்ளார். பணத்தாசைக்காகவும், தனது பின்தொடர்பவர்களின் கோரிக்கையின் பேரிலும்தான் ரித்திக் பசுவுக்கு இறைச்சி கலந்த உணவை ஊட்டினார் என்று புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பரபரப்பான சம்பவம், விலங்கு நலன் குறித்த அக்கறையையும், பிரபலம் மற்றும் பணத்திற்காகச் சமூக ஊடகங்களில் இதுபோன்ற சீரழிவு நடத்தையை ஊக்குவிப்பதன் ஆபத்தையும் எடுத்துக்காட்டுகிறது.
