நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. அந்த வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீரை தேடி குடியிருப்பு பகுதிகள் நுழைகிறது. இந்நிலையில் அரவேனு செல்லும் மஞ்சமலை சாலையில் 4 கரடிகள் உலா வந்தது. இதனை பார்த்து கிராம மக்கள் அச்சம் அடைந்தனர்.

நீண்ட நேரமாக கரடிகள் சாலையில் அங்கும் இங்கும் சுற்றி திரிந்தது. பின்னர் கரடிகள் தேயிலை தோட்டத்திற்குள் நுழைந்தது.bஅட்டகாசம் செய்யும் கரடிகளை கூண்டு வைத்து படிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.