திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் வடக்கு அரியநாயகிபுரம் சுத்தமல்லி அணைக்கட்டுகளில் இருந்து வினாடிக்கு 5000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. மேலும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர் மழை பெய்கிறது. இதனால் பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு உள்ளிட்ட பகுதிகளில் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.

அணையின் பாதுகாப்பு கருதி வடக்கு அரியநாயகிபுரம் அணைக்கட்டில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. எனவே பொதுமக்கள் ஆற்றில் குளிக்கவும் கால்நடைகளை இறக்கவும் வேண்டாம் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.