திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த கோவிலில் குரங்குகள் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. கோவிலில் அன்னதானம் வழங்கினால் பக்தர்களிடம் இருந்து குரங்குகள் பறித்து செல்கிறது.

இந்நிலையில் திருத்தணி வனச்சரகர் தலைமையில் வன ஊழியர்கள் கூண்டுகளை வைத்து மலைக்கோவிலில் சுற்றித்திரிந்த 20-க்கும் மேற்பட்ட குரங்குகளை பிடித்தனர். அந்த குரங்குகள் ஆந்திர மாநில வனப்பகுதியில் கொண்டுவரப்பட்டது. தொடர்ந்து குரங்களை பிடிக்கும் பணி நடைபெறும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.