தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முத்து நகர் கடற்கரை பகுதியில் இறந்த நிலையில் கடல் பசு கரை ஒதுங்கியதை பார்த்த பொதுமக்கள் மன்னார் வளைகுடா கடல்வாழ் உயிரின தேசிய பூங்கா வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று அழுகிய நிலையில் இருந்த கடல் பசுவை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அது 7 அடி நீளமும், 80 கிலோ எடையும் உடையது.

இதனையடுத்து கால்நடை டாக்டர் வினோத் கடல் பசுவின் உடலை பிரேத பரிசோதனை செய்தார். பின்னர் கடல் பசுவின் உடல் அதே பகுதியில் புதைக்கப்பட்டது. இந்த அரியவகை உயிரினம் படகு அல்லது கப்பலில் மோதி இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. ஆனால் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகுதான் உண்மை காரணம் தெரியவரும் என வனதுறையினர் கூறியுள்ளனர்.