உங்கள் குழந்தைகளின் படிப்பு செலவுக்கான சிறந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டம் குறித்து தற்போது பார்க்கலாம். அதன்படி பராக் ஃபரிக் கன்சர்வேடிங் ஹைப்ரிட் ஃபண்ட் திட்டம் உங்களுக்கு நல்ல லாபத்தை அளிக்கும். இந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டம் கடந்த 2021-ம் ஆண்டு தொடங்கப்பட்ட நிலையில், அதன் முதலீட்டாளர்களுக்கு 7.47 சதவீதத்திற்கும் மேல் லாபத்தை வழங்கியுள்ளது. இதில் இணைவதற்கு குறைந்தபட்ச முதலீட்டு தொகை ரூ. 1000 ஆகும்.

நீங்கள் ஒரு மாதத்திற்கு ரூ. 1000 என்ற முறையில் 3 முதல் 5 ஆண்டுகள் வரை தொடர்ந்து முதலீடு செய்து வந்தால்‌ 5 ஆண்டுகளின் முடிவில் ரூ. 65,000 லாபம் கிடைக்கும். இதற்கு சராசரியாக ஒரு வருடத்திற்கு லாபம் கணக்கிட்டால் 7.47 சதவீதம் வரை லாபம் பெறலாம். ஒருவேளை நீங்கள் 5,000 ரூபாய் வரை முதலீடு  செய்ய வேண்டும் என்று விரும்பினால் கூட செய்யலாம். மேலும் ம்யூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் சந்தை அபாயத்திற்கு உட்பட்டவை. நீங்கள் முதலீடு செய்வதற்கு முன்பாக உங்கள் ஆலோசகரிடம் கேட்டறிந்து சுய விருப்பத்தின் பெயரில் முதலீடு செய்ய வேண்டும்.