திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் இருக்கும் கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுகிறதா? என்பதை கண்காணிக்க மாநகராட்சி அலுவலர்கள் தீவிர ஆய்வு பணியில் ஈடுபட்டனர். அப்போது திண்டுக்கல் மேற்கு ரத வீதி பகுதியில் இருக்கும் கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர் செல்வம் தலைமையில் அலுவலர்கள் ஆய்வு செய்தபோது தடை செய்யப்பட்ட 200 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் இருப்பது தெரியவந்தது.

அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து கடையின் உரிமையாளருக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். இதே போல சட்டவிரோதமாக புகையிலை விற்பனை செய்த கடைக்கு சீல் வைக்கப்பட்டது.