
செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஐயா கே.எஸ் அழகிரி குடிவாரி கணக்கு நடத்த வலியுறுத்துறார். ஐயா ராகுல் சொல்கிறார் அல்லவா… கூட்டணி வச்சிருக்குற திமுகவிடம் நான் அழுத்தம் குடுக்குறேன்ல…. நீங்களும் கொடுங்க… ரொம்ப கஷ்டம் வேணாம்…. கர்நாடகாவை காங்கிரஸ் ஆளுது.
காங்கிரஸ் கட்சி அங்க இருக்குற தலைமைக்கு சொல்லி, கர்நாடக மாநிலத்திலே குடிவாரி கணக்கெடுப்பு எடு…. எடுத்து எனக்கு குடுக்கணும் வகுப்பு வாரி பிரதிநிதித்துவம்…. எடுத்து கொடுக்காத, எண்ணி குடு… அள்ளி கொடுக்காத அளந்து கொடு… எங்க கோட்பாட்டின் நிலைப்பாடு.
நீ கவுடாவா…. எவ்வளவு இருக்க ? 1 கோடியா… இந்தா. நீ ராவ்வா எவ்வளவு 50 லட்சமா ? இந்தா.. நீ 1 ½ கோடியா இந்தா …அப்படித்தான கொடுக்கணும். எனக்கு எண்ண ? படையாட்சி நான்… 2 கோடியா இல்ல ? எண்ணும் போது 1 ½ வருது. தூக்கி கொடுத்துடு. நான் யாரு ? தேவரா, கள்ளர், மறவர், அகமுடையர் தனி தனியா எண்ணு…. முக்குலத்தோருன்னு போட்டு மூனே மூணு மினிஸ்டர் போட்டு முடிச்சி உட்டுறுத…
மறவருக்கு ஒன்னு, கள்ளருக்கு ஒன்னு, அகமுடையருக்கு ஒன்னு. ஆனால் இந்த கருணாநிதி ஐயா வீட்டுல ஐயா ஸ்டாலின் ஒரு அமைச்சர், ஐயா உதயநிதி ஸ்டாலின் ஒரு அமைச்சர். உங்க வீட்டுலயே ரெண்டு… நாட்டுல எனக்கு மூணு… என் ஸ்ட்ரென்த் என்ன ? உன் ஸ்ட்ரென்த் என்ன ? அப்போ 50 பேருக்கு 5 பேருக்கு சாப்பாடு அனுப்புற… 5 பேருக்கு 50 பேருக்கு சாப்பாடு அனுப்புற இது சமூக நீதியா ? சமூக அநீதியா ? என தெரிவித்தார்.