சாகசங்கள் செய்வது பலருக்குப் பிடித்தமான ஒன்றாக இருந்தாலும், சில சாகசங்கள் பார்ப்பவர்களின் இதயத் துடிப்பையே ஒரு நிமிடம் நிறுத்திவிடும். அந்த வகையில், தற்போது வைரலாகி வரும் வீடியோ ஒன்றில், ஒரு இளைஞர் தனது பைக்கை அதிவேகத்தில் ஓட்டிச் சென்று, அப்படியே அந்தரத்தில் பல அடி உயரத்திற்குப் பறக்கிறார்.
“ஃப்ரீஸ்டைல் மோட்டோகிராஸ்” (Freestyle Motocross) என்று அழைக்கப்படும் இந்த சாகசத்தில், புவியீர்ப்பு விசையையே சவாலுக்கு இழுப்பது போல அந்த இளைஞர் காற்றில் மிதந்த காட்சி பார்ப்போரை மிரள வைத்துள்ளது.
Luftman Extreme Freestyle takes the audience on a dizzying journey through the world of Freestyle Motocross, where Pro-Riders defy the limits of gravity with impressive maneuvers and breathtaking jumps.pic.twitter.com/bf61ltNAKf
— Massimo (@Rainmaker1973) December 26, 2025
வெறுமனே உயரத்தில் பறப்பது மட்டுமின்றி, காற்றில் இருக்கும்போது அந்த இளைஞர் செய்த சில வித்தைக்கள் மெய்நிகர் காட்சிகளைப் போல (CGI) வியக்க வைக்கின்றன.
பல லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்றுள்ள இந்த வீடியோவில், அந்தரத்தில் பறந்து கீழே இறங்கும்போது அவர் மிகவும் லாவகமாகத் தனது பைக்கை தரை இறக்கிய விதம் தான் ஹைலைட்.
“இதைச் செய்யக் கண்டிப்பா பெரிய தைரியம் வேணும், ஆனா தயவுசெஞ்சு யாரும் இதை முயற்சி செய்யாதீங்க” என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
பல ஆண்டுகாலப் பயிற்சியும், அசாத்தியமான திறமையும் இருந்தால் மட்டுமே இத்தகைய ஆபத்தான சாகசங்களைச் செய்ய முடியும் என்பதற்கு இந்த வீடியோவே சாட்சி.
