தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அவர்கள், தனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் இலவச மின்சாரத் திட்டம் குறித்த மிக முக்கியமான அரசாணையை இன்று வெளியிட்டுள்ளார். இந்த புதிய அறிவிப்பின்படி, ஏற்கனவே நடைமுறையில் உள்ள 100 யூனிட் இலவச மின்சாரத் திட்டமும் தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கும் என உறுதி செய்யப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல், நடுத்தர மக்களின் சுமையைக் குறைக்கும் வகையில், வீட்டு மின் இணைப்பில் 500 யூனிட்டுகளுக்குள் மின்சாரம் பயன்படுத்துவோருக்கு இனி 200 யூனிட்கள் வரை இலவசமாக வழங்கப்படும் என அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

​அதேபோல், 500 யூனிட்டுகளுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கும் சலுகை வழங்கப்பட்டுள்ளது; அவர்களுக்கு 100 யூனிட்கள் இலவசமாகவே கணக்கிடப்படும். இந்த முறைப்படுத்தப்பட்ட இலவச மின்சாரத் திட்டத்தால் தமிழகத்தின் லட்சக்கணக்கான குடும்பங்கள் நேரடிப் பலனைப் பெறுவார்கள். முதல்வர் விஜய்யின் இந்த முதல் கட்ட பொருளாதார நடவடிக்கைகள், மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளதுடன், “சொன்னதைச் செய்யும் அரசு” என்ற நம்பிக்கையையும் விதைத்துள்ளது.