தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்ற நிலையில் இரண்டாவது மாநில மாநாடு இன்று மதுரையில் நடைபெறுகிறது.

இந்த மாநாட்டில் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான தொண்டர்கள் கலந்து கொண்டுள்ள நிலையில் இன்னும் தொண்டர்கள் வந்து கொண்டே இருக்கிறார்கள். நடிகர் விஜயின் இரண்டாவது மாநில மாநாடு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை எடுத்துள்ள நிலையில் பலரும் உற்று நோக்கி கவனித்து வருகின்றனர்.

நடிகர் விஜய் அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிட இருக்கும் நிலையில் கட்சிகளை வலுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளதோடு புதிய நிர்வாகிகளை கட்சியில் சேர்ப்பது மற்றும் புதிய அணிகளை உருவாக்குவது போன்ற பணிகளிலும் ஈடுபட்டுள்ளதோடு பூத் கமிட்டி அமைக்கும் வேலைகளிலும் தீவிரம் காட்டி வருகிறார்.

தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் கூட இல்லாத நிலையில் அடுத்து வரும் 2026 தேர்தலில் கண்டிப்பாக தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற்று முதல் முயற்சியில் வாகை சூடும் என்று நம்பிக்கை தெரிவித்து வருகிறார். தமிழக வெற்றி கழகத்தின் தலைமையில் கூட்டணி என்றும் கூட்டணிக்கு வரும் கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு உண்டு எனவும் நடிகர் விஜய் தான் முதல்வர் வேட்பாளர் எனவும் சமீபத்தில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தின் போது தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தன்னுடைய முதல் மாநில மாநாட்டை வெற்றிகரமாக மிக பிரம்மாண்டமாக விஜய் நடத்தி முடித்த நிலையில் இன்று இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் தொடங்கியுள்ளது. இந்த மாநாட்டில் நடிகர் விஜய் கலந்து கொள்வதற்காக தற்போது மேடைக்கு வருகை புரிந்துள்ளார். மேலும் முதல் மாநில மாநாடு மற்றும் நடிகர் விஜயின் கட்சி கூட்டங்களில் அவரது பெற்றோர் கலந்து கொள்வது போல் இந்த மாநாட்டிலும் அவர்கள் கலந்து கொண்டுள்ளனர். மேலும் நடிகர் விஜய் சற்று நேரத்தில் ரேம்ப் வாக் சென்று மாநாட்டினை தொடங்கி வைக்க இருக்கிறார்.