தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநாடு இன்று மதுரையில் உற்சாகத்துடன் நடைபெறவுள்ள நிலையில், இந்த மாநாட்டிற்காக ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் மதுரையில் திரள்கின்றனர். இந்நிலையில், விஜய் மாநாட்டிற்கு நடந்து வரும்போது, “வாராரு வாராரு அழகர் வாராரு” என்ற பிரபலமான பாடலை ஒளிபரப்ப வேண்டும் என நெட்டிசன்கள் எக்ஸ் தளத்தில் கோரிக்கை வைத்து, அதற்கேற்ப காணொளிகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
இந்த பாடல், மதுரை மண்ணின் பண்பாட்டு அடையாளமாகவும், மக்களின் உற்சாகத்தைப் பிரதிபலிக்கும் வகையிலும் அமைந்துள்ளதால், இது குறித்து சமூக வலைதளங்களில் பரவலான ஆரவாரம் காணப்படுகிறது.
தலைவன் Ramp walk வரும்போது இந்த பாட்ட போடுங்கடா… மொத்த மதுரையும் குலுங்கிறும்!!🥹🥵❤️🔥🔥🔥#TVKVijay #ThalapathyVijay #TVKMaduraiMaanadu #MaduraiMaanadu #தமிழகவெற்றிக்கழகம் pic.twitter.com/ZvflniL84c
— Dhanumersal_Twitzz (@Jana_Nayagan_03) August 20, 2025
