இன்று (மே 15) ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ₹2,280 வரை அதிரடியாகச் சரிந்துள்ளதால் நகைப்பிரியர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். இன்று காலை நிலவரப்படி ஒரு சவரன் ₹1,19,600-க்கு விற்பனையான நிலையில், தற்போது மேலும் சரிந்து ₹1,18,120-க்கு விற்பனையாகிறது. அதாவது ஒரு கிராம் தங்கம் ₹185 குறைந்து ₹14,756-ஆகக் கிடைக்கிறது.
தங்கம் விலை கடந்த சில நாட்களாக விண்ணைத் தொட்டு வந்த நிலையில், இன்றைய இந்தத் திடீர் வீழ்ச்சி இல்லத்தரசிகள் மற்றும் நகை வாங்கத் திட்டமிட்டுள்ளவர்களுக்கு மிகப்பெரிய ஆறுதலாக அமைந்துள்ளது. சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் காரணமாகத் தங்கம் விலை குறைந்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், நகைக்கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதத் தொடங்கியுள்ளது.
