ஹைதராபாத் மற்றும் விசாகப்பட்டினத்தில் சூதாட்ட செயலிகள் மூலம் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்திருப்பதாக புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தியபோது போது, சம்பந்தப்பட்ட சூதாட்ட செயலிகளின் விளம்பரங்களில் திரைப் பிரபலங்கள் நடித்திருப்பது தெரியவந்தது.

பிரபல நடிகர்கள் விளம்பரத்தில் நடித்ததை நம்பி, சூதாட்ட செயலிகளை பயன்படுத்தி 3 கோடி ரூபாய் வரை பணத்தை இழந்ததாக ஒருவர் புகார் அளித்தார். இந்த நிலையில் சூதாட்ட செயலி விளம்பரத்தில் நடித்தது தொடர்பான வழக்கில் சம்மனை ஏற்று ஹைதராபாத்தில் அமலாக்கத்துறை விசாரணைக்கு நடிகர் விஜய் தேவரகொண்டா ஆஜர் ஆனார்.

இதே வழக்கில் ஏற்கனவே நடிகர் பிரகாஷ்ராஜிடம் அமலாக்க துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். நடிகர் ராணா டகுபதி உள்ளிட்ட 36 சினிமா பிரபலங்கள் மீது அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்தது குறிப்பிடத்தக்கதாகும்.