
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கனமழை பெய்தால் மதுரை கிழக்கு, மதுரை வடக்கு வருவாய் வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் ஈரோடு மாவட்டத்தில் மழை காரணமாக 22-ஆம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டது. அதனை ஈடு செய்யும் விதமாக இன்று பள்ளிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.