ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஊத்துக்குளி ரோட்டில் மேலப்பாளையம் பகுதியில் இருக்கும் வனப்பகுதியில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. அங்கு வறண்டு கிடந்த புல், செடி கொடிகளில் தீ வேகமாக பரவியது. இதனை பார்த்த பொதுமக்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். சிலர் பீடி, சிகரெட் புகைத்து விட்டு நெருப்பை அணைக்காமல் போட்டதால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தீயணைப்பு வீரர்கள் தெரிவித்துள்ளனர்.