விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மூவரை வென்றான் பகுதியில் மலைகொழுந்தீஸ்வரர் என அழைக்கப்படும் பழமையான சிவன் கோவில் மலை இருக்கிறது. நேற்று இரவு இந்த மலைக்கு பின்னால் இருக்கும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. மேலும் காற்றின் வேகம் காரணமாக தீ மளமளவென அனைத்து இடங்களுக்கும் பரவியது.

இதனால் விலங்குகள் உயிர் பிழைக்க அங்கும் இங்கும் ஓடுகிறது. இதுகுறித்து அறிந்த வனத்துறையினரும், தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்திற்கு சென்று மலையில் பற்றி எரியும் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.