காஞ்சிபுரம் மாவட்ட நீதிபதியாக செம்மல் என்பவர் வேலை பார்த்து வருகிறார். இவர் சொந்த வேலை காரணமாக திண்டிவனம் சென்று விட்டு அங்கிருந்து தனியார் பேருந்தில் காஞ்சிபுரத்திற்கு நேற்று வந்தார். இந்நிலையில் அதிக சத்தத்துடன் பேருந்தில் சினிமா பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. இதனால் நீதிபதி செம்மல் கண்டக்டரிடம் சத்தத்தை குறைக்குமாறு கூறினார். ஆனால் டிரைவரும், கண்டக்டரும் அவர் கூறியதை அலட்சியப்படுத்தியுள்ளனர்.

இதுகுறித்து நீதிபதி காஞ்சிபுரம் போக்குவரத்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார். அதன் அடிப்படையில் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் உள்ளிட்ட போலீசார் காஞ்சிபுரம் மூங்கில் மண்டபம் அருகே பெருந்தை நிறுத்தி விசாரணை நடத்தினர். இதனையடுத்து டிரைவரை எச்சரித்து பேருந்துக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் பொதுமக்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு டிரைவரும், கண்டக்டரும் மதிப்பளிக்க வேண்டும் என அறிவுரை வழங்கியுள்ளனர்.