உத்தரப் பிரதேசத்தின் கோரக்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க்கில் சனிக்கிழமை காலை இரண்டு இளம் பெண்கள் கடுமையான மோதலில் ஈடுபட்ட சம்பவம் அங்கிருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்தக் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிய வீடியோவில் பதிவாகியுள்ளது.

வீடியோவில், ஒரு பெண் மற்றொரு பெண்ணை நோக்கி திடீரென ஏதோ ஒரு பொருளை வீசுவதுடன் தொடங்குகிறது. பெட்ரோல் பங்க்கில்   பணிபுரிந்த மற்றொரு பெண், உடனடியாக பதிலடி கொடுக்க, சில நொடிகளில் மோதல் தீவிரமாகி, இருவரும் ஒருவரை ஒருவர் பிடித்து தள்ளி, அடித்துக் கொள்ளும் காட்சி பதிவாகியுள்ளது.

பக்கத்தில் இருந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்து நின்றனர், ஆனால் ஒருவர் மட்டும் இறுதியில் தலையிட்டு அவர்களைப் பிரித்தார். பைக்கில் எரிபொருள் நிரப்ப காத்திருந்தவர்கள், சண்டையில் சிக்காமல் இருக்க பின்வாங்கியதும் வீடியோவில் தெரிகிறது.

சில நிமிடங்கள் தீவிரமாக நடந்த இந்த மோதல், ஒரு பார்வையாளர் இடையில் புகுந்து இரு பெண்களையும் அமைதிப்படுத்தியதால் திடீரென நிறுத்தப்பட்டது. இந்தச் சண்டைக்கான காரணம் இன்னும் தெளிவாக தெரியவில்லை; இரு பெண்களும் முன்பே அறிமுகமானவர்களா அல்லது திடீர் மோதலா என்பது தெரியவில்லை.

இதுவரை இந்தச் சம்பவம் தொடர்பாக எந்த முதல் தகவல் அறிக்கையும் (FIR) பதிவு செய்யப்படவில்லை, கைதுகளும் நடக்கவில்லை. சமூக வலைதளங்களில் இந்த வீடியோ பரவியதைத் தொடர்ந்து, பலர் இதுகுறித்து விவாதித்தனர். சிலர் வெள்ளை உடையில் இருந்த பெண்ணை, ஹெல்மெட் அணியாமல் பெட்ரோல் பம்புக்கு வந்ததாக குறை கூற, மற்றவர்கள் பெட்ரோல் பம்பு ஊழியரை விமர்சித்தனர். “பெண்களும் யாருக்கு சளைத்தவர்கள் இல்லை” என்று ஒருவர் கருத்து தெரிவிக்க, “இந்திய ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை” என்று மற்றொருவர் கூறினார்.