
புதுக்கோட்டை மாவட்டம் இறையூரில் வேங்கைவயல் பட்டியல் இன மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள குடிநீர் மேல்நிலைத் தொட்டியில் மலம் கலந்த விவகாரம் தொடர்பாக 20 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருக்கிறது.
புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் வேங்கவயில் கிராமத்தில் பட்டியலின சமூக மக்கள் வசிக்கும் பகுதியில் அமைந்திருந்த குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மலம் கலக்கப்பட்ட விவரம் ஒட்டுமொத்த மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி இருந்தது. இந்த சம்பவம் கடந்த மாதம் 26 ஆம் தேதி நடைபெற்றது. அதன் பின்பு இது குறித்து வருவாய்த்துறையினரும், காவல்துறையினர் தொடர்ந்து பல்வேறு கட்ட விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
தற்காலிகமாக குடிப்பதற்கு மாற்று குடிநீர் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த இழிவான சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்பது தான் அந்த கிராமத்தில் வசிக்கும் மூன்று சமூக மக்களின் ஒட்டுமொத்த கோரிக்கையாக இருந்தது. அதனை வலியுறுத்தி தான் பல்வேறு அரசியல் கட்சியினர், இந்த சம்பவத்தில் ஏன் காவல்துறையினர் இன்னும் குற்றவாளிகளை கைது செய்யவில்லை என்று கேள்வி எழுப்பினார்.
இந்நிலையில் திருச்சி சரக டிஐஜி அமைத்த 11 பேர் கொண்ட குழு கடந்த 9, 10 நாட்களாக விசாரணை நடத்தி வந்தார்கள். இது தொடர்பாக வேங்கைவயல் கிராமத்தைச் 20 பேருக்கு சந்தேகத்தின் அடிப்படையில் சமன் அனுப்பியுள்ளார்கள்.இன்று மாலை 5 மணிக்கு திருச்சி சரக டிஐஜி அமைத்த 11 பேர் கொண்ட குழு முன்பு இவர்கள் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது