திமுகவை ஒழித்துவிடுவேன். இல்லாமல் ஆக்கி விடுவேன் என பிரதமர் பேசியிருப்பதாகவும,  தான் வகிக்கும் பதவியை தாழ்த்தும் வகையில் பேசி இருப்பதாக முதல்வர் ஸ்டாலின்  தெரிவித்திருக்கிறார்.

நாளை தினம் திமுக தலைவரும், முதலமைச்சருமான முக ஸ்டாலின் அவருடைய பிறந்தநாள். இதனையடுத்து தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் திமுக தொண்டர்களுக்கு மடல் ஒன்றை எழுதி இருக்கின்றார். அந்த மடலிலே எனக்கு நீங்கள் தரக்கூடிய பிறந்தநாள் பரிசு என்பது இந்திய ஒன்றியத்தின் ஆட்சி மாற்றமே என குறிப்பிட்டு இருக்கின்றார். தொடர்ந்து அந்த கடிதத்தில் பல்வேறு விஷயங்கள் அவர் குறிப்பிட்டு எழுதி இருக்கின்றார்.

எனக்கு நினைவு தெரிந்த வயது முதல் என் பிறந்தநாள் மார்ச் ஒன்றாம் நாள் அன்று தலைவர் கலைஞரையும்,  தன்னுடைய தாயாரையும் வணங்கி வாழ்த்துக்கள் பெறுவதே என்னுடைய முதல் கடனாக இருந்திருக்கிறது. ஆனால் தற்போது கலைஞர் படத்தின் முன்பு வணங்குகிறேன் என்றும்,  அம்மாவை அரவணைத்து வாழ்த்துகிறேன் என்றும் அவர் உருக்கமாக குறிப்பிட்டு இருக்கிறார்.

மேலும் அரசியல் ரீதியாக பல்வேறு கருத்துகளையும் குறிப்பிட்டிருக்கிறார். பிரதமர் முகத்தில் தோல்வி பயம் தெரிகிறது என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அந்த மடலிலே குறிப்பிட்டு இருக்கின்றார். மேலும் அவர் குறிப்பிடும்போது தான் வகித்து வரக்கூடிய பதவியை தாழ்த்தும் வகையில் பிரதமர் பேசி வருகிறார் என்றும்,  டிஎம்கே வை ஒழித்து விடுவேன்…  இல்லாமல் ஆக்கி விடுவேன் என்றெல்லாம் பிரதமர் பேசுகிறார். இவை அனைத்தும் தோல்வி பயத்தை காட்டுகிறது என்று வகையிலே முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் தன்னுடைய கடிதத்தில் குறிப்பிட்டு இருக்கின்றார்.

இந்தியாவின் மற்ற  மாநிலங்களிலும் இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் தங்களது பணிகளை சிறப்பாக தொடங்கி விட்டதாக செய்திகள் வரக் கூடிய நிலையில் ஒவ்வொரு மாநிலத்திலும் இந்தியா கூட்டணி கட்சிகளுக்கு  பாஜக தொல்லை செய்து வரக்கூடிய நிலையை அவர் சுட்டிக்காட்டி  தன்னுடைய கடிதத்தில் தொண்டர்களுக்கு எழுதியிருக்கின்றார். நம்முடைய அணியின் வெற்றி அகில இந்திய முழுமைக்கும் உறுதியானதாகவே உணர வேண்டும் என  அவர் குறிப்பிட்டு இருக்கின்றார். வீடுகள் தோறும் ஸ்டாலினின் குரலில் ஒலித்திடக் கூடிய வகையில் திமுக தொண்டர்கள் வீடு வீடாக சென்று நாற்பதும் நமதே,

நாடும் நமதே என்ற இலக்கினை அடைந்தெடுக்கக்கூடிய வகையில் கழகப் பணியாற்ற வேண்டும் எனவும் திமுக தொண்டர்களுக்கு  உத்தரவிட்டிருக்கிறார், அதுதான் உடன் பிறப்புகள் ஆகிய நீங்கள் உங்களில் ஒருவனான எனக்கு வழங்கிடும் இனிய பிறந்தநாள் பரிசாகும்.  தலைவர் கலைஞருக்கு அவரது நூற்றாண்டு விழாவில் நாம் அளிக்கும் உண்மையான பரிசாகும் என்றும் திமுக தலைவரும்,  முதலமைச்சருமான மு க ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு கடிதம் எழுதி இருக்கிறார்.