கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வட்டவடிவ பாறை, சூரப்பன்குட்டை ஆகிய பகுதிகளில் முகாமிட்டுள்ள 10 காட்டு யானைகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை தின்றும், காலால் மதித்தும் நாசப்படுத்தி வருகிறது. கடந்த சில நாட்களாக பச்சப்பனட்டி, லட்சுமிபுரம், மேல கவுண்டனூர் பகுதிகளில் சுற்றித் திரியும் காட்டு யானைகளால் விவசாயிகள் மிகவும் அச்சத்தில் இருக்கின்றனர்.

இதுகுறித்து அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, யானைகள் பயிர்களை தொடர்ந்து சேதப்படுத்தி வருகிறது. எனவே சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுத்து, யானைகளை கர்நாடக வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.