
நாமக்கல் மாவட்டம் கருப்பன் சோலை பகுதியில் பாலாஜி என்பவர் வசித்து வருகிறார். விவசாயியான இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பாக தம்மம்பட்டியில் உள்ள வங்கிக்கு சென்றார். அங்கு தனது வங்கி கணக்கில் இருந்து 4 லட்சம் ரூபாயை எடுத்த அவர் அதனை தனது இருசக்கர வாகனத்தில் வைத்துக் கொண்டு வீட்டிற்கு திரும்பினார். அப்போது பூச்சிக்கொல்லி மருந்து வாங்க சாலையோரத்தில் பைக்கை நிறுத்திவிட்டு கடைக்கு சென்றார்.
அங்கு வந்த இரு நபர்கள் பைக்கில் இருந்த 4 லட்சம் பணத்திலிருந்து 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை திருடி சென்றனர். அதன் பின் பாலாஜி வீட்டுக்கு வந்து பணத்தை சரிபார்தத போது பணம் காணாமல் போனது தெரிய வந்தது. உடனே இது குறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் படி வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில் சாலை ஓரத்தில் நின்றிருந்த பைக்கிலிருந்து திருடிய நபர்கள் பெரம்பலூர் மாவட்டம் கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த துரை, அன்பு என்பது தெரியவந்தது. தற்போது துரை என்பவரை கைது செய்த காவல்துறையினர் அவரிடமிருந்து 2.5 லட்சம் ரொக்கத்தை பறிமுதல் செய்தனர். மேலும் அன்பு என்பவரை காவல் துறையினர் தேடி வரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.