சேலம் மாவட்டத்தில் உள்ள சங்ககிரி பகுதியில் மெக்கானிக்கான முருகேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பவானி மெயின் ரோடு பச்சைக்காடு பகுதியில் இருக்கும் நெடுஞ்சாலைக்கு சொந்தமான புளிய மரத்தில் புளியம்பழம் பறிப்பதற்கு குத்தகைக்கு எடுத்துள்ளார். நேற்று முன்தினம் முருகேசன் புளிய மரத்தில் பழம் பறித்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக மின்கம்பி உரசியது.
இதனால் மின்சாரம் தாக்கி மரத்திலிருந்து கீழே விழுந்த முருகேசனுக்கு படுகாயம் ஏற்பட்டது. அவரை சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முருகேசன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.