சேலம் மாவட்டத்தில் உள்ள புதிய பேருந்து நிலையத்திலிருந்து தனியார் பேருந்து கல்லூரி மாணவ- மாணவிகள் உள்பட 81 பயணிகளுடன் ஏற்காடு நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை ராஜா என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இலையில் ஏற்காடு மலைப்பாதை 16-வது கொண்டே ஊசி வளைவில் சரியாக பிடிக்காமல் பழுது ஏற்பட்டதால் பேருந்தை சாலையோரம் நிறுத்தி ராஜாவும், கண்டக்டரும் சேர்ந்து சரி செய்து ஏற்காடு நோக்கி ஓட்டி சென்றனர்.

இதனையடுத்து 18-வது கொண்டே ஊசி வளைவு அருகே மீண்டும் பழுதாகி கட்டுப்பாட்டை இழந்த பேருந்து மலைச்சாலையில் பின்னோக்கி சென்றதால் பயணிகள் அலறி சத்தம் போட்டனர். இதற்கிடையே சுற்றுலா பயணிகள் வந்த கார் மீது பேருந்து மோதியது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதனை தொடர்ந்து 81 பயணிகளும் சுமார் 3 கிலோமீட்டர் தூரம் ஏற்காட்டுக்கு நடந்து சென்றனர். பராமரிப்பு இல்லாமல் பேருந்துகளை இயக்குவதால் விபத்து நடக்கிறது. எனவே பேருந்தின் உரிமையாளர்கள் நல்ல முறையில் பேருந்தை பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.