ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வேம்பு கிராமத்தில் விவசாயியான முனுசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக முனுசாமி மனநலம் பாதிக்கப்பட்டு மருந்து சாப்பிட்டு வந்துள்ளார். கடந்த 21-ஆம் தேதி முனுசாமி மருந்துக்கு பதிலாக பயிர்களுக்கு வாங்கி வைத்திருந்த பூச்சி மருந்தை தவறுதலாக குடித்து மயங்கி விழுந்தார்.

அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி முனுசாமி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.