கடலூர் மாவட்டத்தில் உள்ள மருத்துவர் கிராமத்தில் விவசாயியான சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி விஜயாவுக்கு அடிக்கடி உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனால் அதே பகுதியில் வசிக்கும் 16 வயதுடைய 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி விஜயாவிற்கு உதவியாக வீட்டில் வேலை செய்து வந்துள்ளனர்.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சேகர் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அந்த மாணவி 4 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். இதுகுறித்து அறிந்த மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்த போலீசார் சேகரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.