கன்னியாகுமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற பகவதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்நிலையில் கோவில் நிர்வாகம் சார்பில் வைக்கப்பட்ட 17 உண்டியல்களும் 3 மாதங்களுக்கு ஒரு முறை எண்ணப்படுகிறது.

இந்நிலையில் நேற்று குமரி மாவட்ட கோவில்களின் இணை ஆணையர் ஞானசேகர் தலைமையில், உண்டியல்கள் திறந்து காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. அப்போது உண்டியல் மூலம் 35 லட்சத்து 45 ஆயிரத்து 322 ரூபாய் பணம், 101 கிராம் தங்கம், 85 கிராம் வெள்ளி மற்றும் வெளிநாட்டு பணம் வசூலானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.