ஹாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகராக இருந்தவர் ரிக்கோ பிரௌனிங் (93). இவர் வயது முதிர்வின் காரணமாக காலமானார். இவருடைய மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் நடிகர் ரிக்கோ பிரௌனிங் கடந்த 1950-ம் ஆண்டு 3டி கருப்பு, வெள்ளை திரைப்படம் ஆன கிரியேச்சர் பிரம் த பிளாக் ஸ்கூல் என்ற படத்தில் நீருக்கடியில் நடித்து பிரபலமானார். மேலும் நடிகர் ரிக்கோ ஒரு பிரபலமான நீச்சல் வீரர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.