பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் சைஸ் மோர் (61) உடல் நலக்குறைவினால் காலமானார். அமெரிக்காவை சேர்ந்த டாம் சைஸ் மோர் உடல்நலக் குறைவினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். கோமா நிலைக்கு சென்ற டான் சைஸ் மோர் தற்போது உயிரிழந்துள்ளதாக அவருடைய மேனேஜர் கூறியுள்ளார்.

இவருடைய மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். மேலும் நடிகர் டாம் சைஸ் மோர் சேவிங் பிரைவேட் ரியான், பிளாக் ஹாக் டவுண், நேச்சுரல் பார்ன் கில்லர்ஸ், டெவின் இன் ஏ ப்ளூ டிரஸ், எனிமி ஆப் தி ஸ்டேட், பேரல் ஹார்பர் போன்ற படங்களில் நடித்து புகழ்பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.