உதவி செய்ய போய் சிக்கலில் மாட்டிக்கொள்ளும் இளைஞர் எப்படி மீள்கிறார் என்பது தொடர்பான கதைக்களம் தான் “அயோத்தி”

அயோத்தியில் வசிக்கக்கூடிய பல்ராம் குடும்பம் தெய்வ நம்பிக்கையும், சாஸ்திரம், சடங்கு இவற்றில் ஊறிப்போனவர்களாக உள்ளனர். இதில் பல்ராம் தனது குடும்பத்தினர் மீது எரிந்து விழும் நபராக உள்ளார். மனைவியை எந்த நேரமும் அடக்கி, ஒடுக்கி மகள்-மகன் இருவரிடமும் பாசம் காட்டாமல் மிரட்டிக்கொண்டிருக்கிறார்.

ஒரு தீபாவளி நாளில் இவர்கள் ராமேஸ்வரத்துக்கு புனிதப் பயணம் மேற்கொள்கின்றனர். மதுரை ரயிலில் வந்து அங்கிருந்து ராமேஸ்வரத்திற்கு காரில் பயணம் செய்கிறார்கள். பல்ராமின் முரட்டுத் தனமான நடவடிக்கையால் கார் ஓட்டுநர் தமன் கவனம் தவறிவிட கார் பெரிய விபத்தில் சிக்கிக்கொள்கிறது. இதனால் அந்த குடும்பமே கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள்.

அவர்களை ஆம்புலன்ஸ் வாயிலாக மருத்துவமனையில் சேர்க்க நாயகன் சசிகுமார் மற்றும் புகழ் இருவரும் வருகின்றனர். இறுதியில் விபத்தில் சிக்கிய பல்ராம் குடும்பம் என்ன ஆனது..? மீண்டும் சொந்த ஊரான அயோத்திக்கு சென்றார்களா..? பல்ராம் குடும்பத்தை சசிகுமார் காப்பாற்றினாரா…? என்பதே படத்தின் மீதிக்கதை ஆகும். உணர்ச்சிப் பூர்வமாக படமாக்கி உள்ளார் டைரக்டர் மந்திரமூர்த்தி.