வேட்பு மனுவில் தவறான தகவல் அளிப்பதை தகுதி இழப்பாக கருத முடியாது என்ற வாதத்தை தமிழ்நாடு அரசு முன் வைத்திருக்கிறது.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டபோது வேட்பு மனுவில் சொத்துக்களை மறைத்திருக்கிறார். கல்வி தகுதியை மறைந்திருக்கிறார் என்று அதிமுகவின் முன்னாள் எம்எல்ஏ சுப்புரத்தினம் என்பவர் வழக்கு தொடர்ந்திருக்கிறார். எனவே அவர் எம்எல்ஏவாக நீடிக்க தகுதி இல்லை என்றும் என்பதால் அவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்.

எந்த அடிப்படையில் அவர் எம்எல்ஏவாகவும்,  எதிர்க்கட் தலைவராகவும் செயல்படுகிறார் என்பது குறித்து விளக்கம் கேட்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்த போது,  மனுதாரர் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டது. அதன் பிறகு தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் வேட்புமனுவில் தவறான தகவலை தெரிவிப்பது என்பது தகுதி இழப்பு செய்ய வேண்டியதாக இருக்காது. இது சம்பந்தமாக தேர்தல் வழக்கு தொடரப்பட்டால் அதில்தான் தீர்வு காண வேண்டும் என்று வாதிடப்பட்டது.

வேட்பு மனுவில் தவறான தகவல் தெரிவித்து இருந்தால் தேர்தல் வழக்காக தாக்கல் செய்திருக்க வேண்டும். அவ்வாறு தாக்கல் செய்யாமல் இந்த மனுவை விசாரணை  எடுக்கக் கூடாது என்றும் நீதிபதிகளும் தெரிவித்தனர். இதையடுத்து தகுதி இழப்பு செய்ய முடியும் என்பது தொடர்பான உச்ச நீதிமன்ற உத்தரவுகள் என்னென்ன இருக்கிறது ? என்பதை மனதாரர் தரப்பில் தாக்கல் செய்வதற்கு அவகாசம் வேண்டும் என கேட்கப்பட்டது. அதை தாக்கல் செய்வதற்கு அவகாசம் வழங்கி வழக்கின் விசாரணையை நவம்பர் மூன்றாம் தேதிக்கு தள்ளி வைத்திருக்கிறார்கள்.