செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுகவின் பொதுச் செயலாளருமான எடப்பாடி கே.பழனிச்சாமி, ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 7 பேர் விடுதலை ஆவதற்கு காரணமாக இருந்ததும் அண்ணா திமுக அரசாங்கம் தான். திமுக அரசாங்கம் இருக்கின்ற பொழுது நீதிமன்றத்துல தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்த 7 பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு தீர்ப்பு வழங்க பட்டது. அப்பொழுது திராவிட முன்னேற்ற கழக ஆட்சி திரு. கருணாநிதி அவர்கள் முதலமைச்சராக இருந்தார்.  அமைச்சரவை கூட்டபட்டு அதிலே தீர்மானம் கொண்டு வந்தார்கள்.

அந்த தீர்மானத்தில் ஏற்கனவே நீதி மன்றம் அளித்த  தீர்ப்பை நிறைவேற்றலாம். நளினிக்கு குழந்தை இருக்கின்ற காரணத்தினாலே அவருக்கு ஆயுள் தண்டனையாக குறைக்கலாம் என்று தீர்மானத்தை நிறைவேற்றியது தான் திமுக அரசாங்கம். அதுல கையெழுத்து போட்ட அமைச்சர் எல்லாம் இப்போதும் உக்காந்துட்டு இருகாங்க. இவர்கள் எல்லாம் போய் ராஜிவ் காந்தி கொலை வழக்கிலே குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று போராட்டம் நடத்துறாங்க.

அண்ணா திமுக அரசாங்கம் மட்டும் இல்லாவிட்டால்,  அந்த 7 பேரும் தூக்கு தண்டனை நினைவேற்றபட்டிருக்கும். அவர்களை  காப்பாற்றியது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக அரசு என்பதையும் இந்த நேரத்திலே சுட்டிக்காட்ட விளைகிறேன். அண்ணா திமுக ஆட்சியில் கோவை குண்டு வெடிப்பு வழக்கில் நோயாளியாக இருந்த திண்டுக்கல் மீரான் மைதீன் என்ற சிறைவாசி விடுதலை செய்யபட்டார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் எப்பொழுதுமே சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பாக தான் இருந்து இருக்கிறது.

பாபர் மசூதி இடிக்கின்ற பொழுது இந்தியாவே பற்றி  எரிந்தது. தமிழ்நாட்டு அமைதி பூங்காவாக விளங்கியது.  சட்டத்தின் ஆட்சி  அண்ணா திமுக ஆட்சி. அதனால எந்த வித ஒரு தவறும் நடக்காமல்… எந்த ஒரு அசம்பாவிதமும் நடக்காமல்….  எந்த ஒரு சிறுபான்மை மக்களும் பாதிக்காத அளவிற்கு காத்த அரசாங்கம் அண்ணா திமுக அரசாங்கம் என தெரிவித்தார்.