
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஸ்ட்ராங் என்று சொல்லக்கூடிய அஸ்திவாரம்… அஸ்திவாரம் பலமாக இருக்க வேண்டும் என்ற வகையில் கழகத்தில் பூத் கமிட்டி, இளைஞர் – இளம் பெண் பாசறை, மகளிர் குழு போன்றவை அமைக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டு, அந்த அடிப்படையிலே பணிகள் முடிக்கி விடப்பட்டு….
மாவட்டத்தின் உடைய மேற்பார்வையாளர்கள், அதேபோன்று மாவட்ட கழக செயலாளர் உடைய கூட்டம் சிறப்பான முறையில் நடைபெற்று… நம்முடைய கழகத்தினுடைய பொதுச் செயலாளர் அண்ணன் எடப்பாடியார் அவர்கள், நல்ல பல கருத்துக்களை… மாவட்ட கழகச் செயலாளர் களுக்கும், மேற்பார்வையாளர்களுக்கும் தெரிவித்திருக்கிறார்கள்.
எனவே அவரின் கருத்தை ஏற்று எதிர்பார்க்கின்ற நாடாளுமன்ற தேர்தலில்…. விரைவில் வர உள்ள சூழ்நிலையில்…. ஒரு கழகத்திற்கு பேஸ் என்ற…. பவுண்டேஷன் என்று சொல்லக்கூடிய அஸ்திவாரம் சிறந்த தளமாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு அறிவுரைகள் வழங்கப்பட்டு, அதன் அடிப்படையில் ஏற்கனவே பணிகள் எல்லாம் சில மாவட்டங்களில் முடிக்கப்பட்டு,
சில மாவட்டங்களிலே அது விரைந்து முடிக்கப்பட வேண்டும் என்று நம்முடைய பொதுச் செயலாளர் உத்தரவின் அடிப்படையில்…. நம்முடைய மாவட்ட கழகச் செயலாளர், மேற்பார்வையாளர் அனைவரும் மாவட்டத்திற்கு சென்று தன்னுடைய பணியை ஆற்றி இருக்கிறார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.