செய்தியாளர்களை சந்தித்த தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான்பாண்டியன், ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக  போடப்பட்ட அருணா ஜெகதீசன் அவர்களுடைய கமிஷன்ல நடந்தது என்ன ?  எத்தனை பேரை சஸ்பெண்ட் செய்தீர்கள்? உயர் அதிகாரி எங்க ? இன்ஸ்பெக்டர்,  சப் இன்ஸ்பெக்டரை சஸ்பென்ஸ் பண்ணுனீங்களா… என்ன நடவடிக்கை எடுத்தீங்க ? அதுல நாடகம் இருக்கா ? இல்லையா ?

IG, DIGல இருந்து தான் கீழே  வர முடியும். டைரக்ட்டா போய் ஒரு எஸ்.ஐ  சுட முடியாது, இன்ஸ்பெக்டர் சுட  முடியாது. தாசில்தார் சொன்னாளோ, ஆர்.டிஓ சொன்னாளோ  துப்பாக்கி சுடு பண்ண முடியாது. மேல இருந்து ஒப்புதல் கேட்டு தானே சுட்டு இருக்க முடியும்.

அந்த அதிகாரி..  எத்தனை அதிகாரி மேல இந்த அரசு நடவடிக்கை எடுத்திருக்கு சொல்லுங்க ? கமிஷன் போட்டதால் பயன் என்று சொல்கிறீர்களே…. சொல்லுங்க.  மக்களை ஏமாற்றுகிறீர்கள், நான் நம்ப தயாராக இல்லை. எங்க ? யாரு ? இத்தனை பேர் இறந்துருக்காங்க…

சூடச் சொன்னது யாரு ?   என்று அரசை சொல்ல சொல்லுங்க. ஏன் அதை இன்னும் கண்டுபிடிக்கல.  அருணா ஜெகதீசன் அறிக்கையில் இந்த அதிகாரியால் தான் துப்பாக்கி சூடு நடந்தது என்று ஏன் சொல்லல ? அவங்க எல்லாமே பொய்…. தனிநபர் ஆணையம் என்பது மக்களை ஏமாற்றுகின்ற ஒரு நாடகம். இல்லை  என்று சொல்ல முடியாது என தெரிவித்தார்.