இன்றைய காலகட்டத்தில் பலரும் லைக்ஸ் மற்றும் வியூஸ்க்குகாக எல்லை மீறி விடுகிறார்கள். நக்கலும் நகைச்சுவையும் ஒரளவிற்கு பரவலாக இருந்தாலும், அப்பாவி மக்களின் மனஅமைதி, பாதுகாப்பு பாதிக்கப்படும்போது அது விவரிக்க முடியாத அபாயமாக மாறுகிறது. இப்போது இணையத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோ இதற்கு சாட்சி.
View this post on Instagram
இந்த வீடியோவில், ஒரு பெண் ஸ்கூட்டர் ஓட்டுகிறார், பின்னால் அவரது நண்பன் பயணியாக அமர்ந்திருக்கிறார். ஆரம்பத்தில் எல்லாம் சாதாரணமாகத் தான் தெரிகிறது. ஆனால் திடீரென்று அந்த இளைஞர், “தள்ளி போங்க! இவருக்கு ஓட்டத் தெரியாது!” என சத்தமிட்டு அலறத் தொடங்குகிறார். சாலையில் நடக்கின்ற பொதுமக்கள் முதல் கவனிக்காதது போல் நடந்துகொண்டாலும், அந்த வார்த்தைகள் மீண்டும் மீண்டும் சொலப்பட்டதுடன், சூழ்நிலை பதற்றமாக மாறியது.
இதனால் மக்கள் திடீரென பீதி அடைந்து ஒரு பக்கம் ஓடினர். சிலர் பதறி குதித்து ஓட, சில இளைஞர்கள் தங்களுடைய மொபைலை எடுத்து அந்தச் சம்பவத்தை வீடியோ எடுக்க முயற்சி செய்தனர். பின்னர் இது ஒரு பிராங்க் தான் என்று தெரிந்த போது, அந்த நொடிகளில் ஏற்பட்ட பீதியும் பதற்றமும் உண்மையிலேயே கவலைக்கிடமானது.
