
தென் சென்னை பாராளுமன்ற தொகுதி பாஜக செயல்வீரர் கூட்டத்தில் பேசிய பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை, ஓசூரில் பேசும்போது கூட சொன்னேன். திராவிட முன்னேற்றக் கழகம் கட்சி ஆரம்பித்த நாள் ஐயா வி.பி துரைசாமி இங்கு இருக்கிறாங்க. செப்டம்பர் 16 1949இல் திராவிட முன்னேற்றக் கழகம் கட்சி ஆரம்பிக்கப்பட்ட நாள். அந்த கட்சி பார்த்தீங்கன்னா…. அப்போது Dravidian Progressive Federation அமைப்பாக இருக்கு. அப்போ அவுங்க எல்லாம் சென்னைல ஒரு இடத்துல உக்கார்ந்து மீட்டிங் போட்டு,
செயற்குழு மாதிரி ஒரு கூட்டத்தை கூட்டி, நாங்க திமுக ஆரம்பிக்கிறோம் என்று சொல்கிறார்கள். அவர்கள் சொன்ன கருத்துக்கள்….. அந்த கூட்டத்தினுடைய தலைவரும், அண்ணாதுரை பேசிய கருத்துக்கள் பார்த்தீர்கள் என்றால் ? பெரியார் அவர்கள் சர்வதிகாரியாக மாறிவிட்டார். திருமணத்திற்கு பிறகு முழு சர்வாதிகாரியாக மாறிவிட்டார். அவரிடத்திலே எங்களுக்கு எந்த நியாயம் கிடைக்கும் என்று தெரியவில்லை. அதனால் தனி கட்சி தேவை படுக்கின்றது. அதற்காக Dravidian Progressive Federation, திராவிட முன்னேற்றக் கழகம் தேவைப்படுகிறது என்று 16.8.1949இல் ஆரம்பிக்குறாங்க.
பெரியார் முழுவதும் வேண்டாம் என்று சொல்லி வந்தவர்கள்….. பெரியாரை சர்வாதிகாரி என்று சொன்னவர்கள்….. இன்னைக்கு நம்முடைய பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களை சர்வாதிகாரி என்று சொல்கிறார். என்ன டிராமா ? என்ன காமெடி பாருங்க….. இன்னைக்கு வந்து இல்லை இல்லை பெரியார் அவர்கள் தான் எங்களுக்கு எல்லாம். அவர்தான் எங்களுடைய தந்தை.. அவர்கள் இல்லாமல் நாங்க இல்ல என சொல்கிறார்கள். ஆனால் இவர்கள் அனைவருமே பெரியாரை எதிர்த்து வெளியே வந்தவர்கள்…. பெரியார் வேண்டவே வேண்டாம் என வந்தார்கள் என தெரிவித்தார்.