செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை , நீட்க்கு எதிராக  அவங்க ( DMK ) என்ன பண்ணனும் ? சுப்ரீம் கோர்ட்டுக்கு போகணும்…  ரிவ்யூ பெட்டிஷன் போட்டு,  கேன்சல் ஆயிருக்கு. டேட்டா வச்சு  சுப்ரீம் கோர்ட்டுக்கு போனும். சுப்ரீம் கோர்ட்டுக்கு போய்…  சுப்ரீம் கோர்ட்ல  நீட் உண்மையாக கான்ஸ்டியூசனல் ஸ்டேட்டஸ் இருக்கு என அந்தஸ்து  வந்திருக்கு. அதன் பிறகு ஒருமுறை இதற்கு முன்பு இருந்த குடியரசுத் தலைவர்களால் நிராகரிக்கப்பட்டு இருக்கிறது.

இரண்டாவது முறை குடியரசு தலைவரிடம் போய் இருக்கு. இப்போ நீட் வேண்டாம் என்று சொன்னீர்கள் என்றால் ?  அரசியலமைப்புச் சட்டம் தெரிந்த யாராக இருந்தாலும் சொல்லுவாங்க. இது அரசியலமைப்பிற்கு எதிரானது  ( Anti-constitutional ) என்று சுப்ரீம் கோர்ட்டுக்கு போகணும். கையெழுத்து வாங்கி என்ன பிரோயோஜனம் ? கையெழுத்து வாங்கி என்ன  நடக்கப்போகுது ? ஒரு ஆளும் கட்சி 50 லட்சம் கையெழுத்து வாங்க முடியாதா ?

தமிழ்நாட்டில் 8 1/2  பேர் இருக்கின்றோம். DMKவில் இவுங்க சொல்லுற உறுப்பினர்களே 1.50 கோடி இருப்பாங்க. திமுக உறுப்பினர்கள் இவ்வளவு நபர்களை வைத்துக் கொண்டு, 50 லட்சம் கையெழுத்து வாங்க முடியாமல் இருந்தால் ? திமுக கட்சியை இழுத்து மூடி விட்டு வீட்டுக்கு செல்ல வேண்டும். திமுகவை பொருத்தவரை அவர்கள் இது ஒரு நாடகமாகத்தான் பார்க்கிறார்கள். நீட் என்பது தமிழ்நாட்டில் எல்லோரும் ஏத்துக்கிட்டாச்சு என தெரிவித்தார்.