சமூக வலைதளங்களில் விலங்குகளின் வீடியோக்கள் அடிக்கடி வைரலாகி மக்களை மகிழ்விக்கின்றன. அப்படி ஒரு மகிழ்ச்சி தரும் வீடியோ தற்போது எக்ஸ் தளத்தில் பரவி வருகிறது, இதில் நெருப்புக்கோழி பறவையும், நாய்களும் சேர்ந்து மகிழ்ச்சியாக விளையாடும் காட்சி இடம்பெற்றுள்ளது.
இந்த 29 வினாடிகள் கொண்ட வீடியோவை @AMAZlNGNATURE என்ற கணக்கில் பகிரப்பட்டு, 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வைகளையும், 9,000-க்கும் மேற்பட்ட லைக்ஸ்களையும் பெற்று, மக்களின் இதயங்களை வென்றுள்ளது. வேறுபட்ட இனங்களைச் சேர்ந்த இந்த விலங்குகளின் அசத்தலான நட்பு, எல்லோரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
வீடியோவில், நெருப்புக்கோழி பறவை வேகமாக ஓடி வருவதைப் பார்க்கும்போது, அது நாய்களை தாக்க வருவதாகத் தோன்றுகிறது. ஆனால், அருகில் வந்தவுடன், பறவையும், நாய்களும் குழந்தைகளைப் போல மகிழ்ச்சியாக ஓடி விளையாடத் தொடங்குகின்றன. பொதுவாக, நெருப்புக்கோழி பறவைகள் ஆக்ரோஷமான இயல்பு கொண்டவை என்றும், நாய்கள் மனிதர்களின் உற்ற நண்பர்கள் என்றும் அறியப்படுகின்றன.
ஆனால், இந்த வீடியோவில் இரு விலங்குகளும் அற்புதமாக ஒருவரையொருவர் புரிந்து, நட்பு பாராட்டி விளையாடுவது பார்ப்போரை மெய்சிலிர்க்க வைக்கிறது. “இதுதான் உண்மையான மகிழ்ச்சி, எந்த பிரச்னையும் இல்லாமல் விளையாடுவது!” என்று ஒரு பயனர் கருத்து தெரிவித்துள்ளார், மற்றொருவர், “பறவையும் நாயும் ஓட்டப்பந்தய பயிற்சியில் இருக்கின்றனவோ!” என்று நகைச்சுவையாக குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ, விலங்குகளின் அழகான நட்பை பறைசாற்றி, பார்ப்போர் மனதை நிச்சயம் கவர்ந்துள்ளது.
